சாத்தான்குளம்: டீக்கடைக்கு வந்த 1.71 லட்சம் ரூபாய் மின் கட்டணம் - உரிமையாளர் அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் மேல சாத்தான்குளத்தில் டீக்கடை நடத்தி வரும் பிச்சைமணி என்பவருக்கு, வழக்கத்திற்கு மாறாக 1.71 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.