கிண்டி: உதயநிதி மீது எனக்கும் நம்பிக்கை இல்லாமல் இருந்தது - சின்னமலை பொதுக்கூட்டத்தில் போட்டு உடைத்த அமைச்சர் துரைமுருகன்
Guindy, Chennai | Nov 27, 2025 தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னமலை பகுதியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அமைச்சர் துரைமுருகன் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் கட்சியை வழிநடத்தினார் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி வழிநடத்துவாரா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது என்றார்