பழனி: பாலாறு அணை பகுதியில் ஒற்றை காட்டுயானை ஒன்று பகல் நேரத்தில் சாவகாசமாய் சுற்றித் திரிந்த நிலையில் வனத்துறையினர் வெடி வைத்து யானையை விரட்டும் பணி
பழனியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாலாறு பொறுந்தலாறு அணைப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று பகல் நேரத்திலேயே சுற்றித்திரிவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அணையின் பின்பகுதியில் தண்ணீர் அருந்த வனவிலங்குகள் வந்துசெல்வது வாடிக்கையான ஒன்றாகும். யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.