திருப்பூர் தெற்கு: திருப்பூர்: கூடுதல் கட்டணம் வசூலித்த மினி பேருந்துகள் சிறைபிடிப்பு - போராட்டத்தால் பரபரப்பு
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த மினி பேருந்துகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.