தூத்துக்குடி: தூத்துக்குடியில் காங்கிரஸ் மாவட்ட மறுசீரமைப்பு கூட்டம்: எம்பி மாணிக்கம் தாகூர் பங்கேற்பு
தூத்துக்குடியில் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பு மறுசீரமைப்பு மற்றும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர்.