ஓசூர்: ஓசூரில் வறுமையிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஜோகி சமூகத்தினரின் நவராத்திரி விழா
ஓசூர் ரயில் நிலையம் அருகே வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட வடமாநில ஜோகி குடும்பத்தினர், வறுமையிலும் தங்கள் பாரம்பரிய நவராத்திரி விழாவை துர்கா தேவி சிலையுடன் உற்சாகமாக கொண்டாடி நீர் நிலையில் கரைத்தனர். அவர்களின் கலாச்சார பற்று அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.