பெரம்பலூர்: மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது- தெரணி ஊராட்சி கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தெரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 145 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.