போடிநாயக்கனூர்: தேனி: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் குளிக்க தடை!
தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அல்லது கால்நடைகளை அழைத்துச் செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.