பழனி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் முகாம்களில் ஆட்சியர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ வசதி மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.