போடிநாயக்கனூர்: போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் மதுரை மண்டல மேலாளர் திடீர் ஆய்வு!
போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் மதுரை மண்டல மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு மேற்கொண்டார். ரயில் பணியாளர்களுக்கான ஓய்வு அறை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் கூடுதல் ரயில் வசதிகள் குறித்த பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.