விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்க செயின் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த பெண்ணாடம் ரோடு தெற்கு தெருவை சேர்ந்த பெண் ஒருவர், புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்திற்கு சென்ற பொழுது அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளார். பின்னர் நெரிசலில் இருந்து மீண்டு வந்து பார்த்த பொழுது தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி செயினை திருடிய ஆந்திரா பகுதியைச் சார்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.