விருத்தாசலம்: குருவன்குப்பம் பகுதியில் அரசின் அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
மாவட்ட புள்ளிகள் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் விருதாச்சலம் ஆலடி சாலை குருவன் குப்பம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் அரசின் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.