விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் ஜவுளி கடையில் புடவைகளை திருடும் இரண்டு பெண்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் கடந்த மாதம் 23ஆம் தேதி துணி எடுக்க வந்த இரண்டு பெண்கள் புடவை எடுப்பது போல் நடித்து சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புடவைகளை திருடி சென்றனர். இது குறித்து சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பொழுது, அதில் இரண்டு பெண்கள் புடவைகளை திருடியது தெரிய வந்தது. அவர்கள் மீண்டும் நேற்று கடைக்கு வந்த நிலையில் அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.