பழனி: ஆயக்குடியில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளை ஆதரவற்ற முதியர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினர். ஒவ்வொருவருக்கும் புதிதாக சில்வர் பாத்திரங்கள் கொடுக்கப்பட்டு அவைகளில் இனிப்பு மற்றும் சாப்பாடு, சாம்பார், பொரியல் அடங்கிய அறுசுவை உணவு வழங்கினர்.