கயத்தாறு: தெற்கு காரசேரி கிராமத்தில் மின் கட்டணம் கட்டாததால் மின்மோட்டார் கான மின் இணைப்பு துண்டிப்பு
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு காரசேரி கிராமம். இந்த கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இதற்கான மின் கட்டணம் ஊராட்சி சார்பில் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மின்மோட்டாருக்கான இணைப்பு மின்சார வாரியம் சார்பில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் குடிநீருக்கு சிரமமடைந்து வருகின்றனர்.