வாணியம்பாடி: தேங்கி நிற்கும் மழைநீரால் அவதிப்படும் மக்கள் - சாலையைச் சீரமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமம், புதுமனை தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடிகால் வசதிகளைச் செய்து, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சதா சிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.