பெரம்பலூர்: பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!
பெரம்பலூரில் சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அப்துல்ராசிக் தொடங்கி வைத்த இந்த பேரணியில், திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சைகை மொழி குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.