விளவங்கோடு: முளகுமூடு: 10 மாதங்களாக சீரமைக்கப்படாத சாலையால் பொதுமக்கள் அவதி!
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டில் 10 மாதங்களாக சீரமைக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். சாலை சீரமைப்பு கோரி ஒட்டிய போஸ்டர்களை பேரூராட்சி ஊழியர்கள் கிழிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.