வேலூர்: எம்.எல்.ஏ மகன் மீது கடையை இடித்ததாக போலீசில் புகார்
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கார் டெக்கரேட்டர்ஸ் கடையை, ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமாரின் மகன் கோபிநாத் டிப்பர் லாரியைக் கொண்டு இடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.