திருப்பூர் தெற்கு: திருப்பூர்: வாகன உதிரிபாகங்கள், எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த சிஐடியு கோரிக்கை
திருப்பூரில் நடைபெற்ற சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்கங்களின் பேரவையில், எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், புதிய மோட்டார் வாகன சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. டிசம்பர் 1 டில்லி போராட்டத்திற்கு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.