செங்கல்பட்டு: 7 மாதங்களாக எரியாத மின்விளக்குகள்: செங்கல்பட்டு மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலை ரயில்வே மேம்பாலத்தில் 7 மாதங்களாக மின்விளக்குகள் எரியாததால் விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் படுகாயமடைந்து வருவதால், உடனடியாக மின்விளக்குகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.