ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே விவசாயி கத்திக்குத்து: முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வாழைத்தோட்ட தகராறில் விவசாயி ஜெயசீலனை கத்தியால் குத்தியதாக, முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகன் அசோக் சிங்கை புதியம்புத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காயமடைந்த ஜெயசீலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.