தருமபுரி: தருமபுரியில் அரிசி மூட்டை மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கம் போராட்டம்
விலைவாசி உயர்வைக் கண்டித்து தருமபுரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் அரிசி மூட்டை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.