ஆம்பூர்: திருப்பத்தூர்: ஆர்மாமலை குகைகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே மலையாம்பட்டில் உள்ள ஆர்மாமலை குகைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள பண்டைய ஓவியங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.