விளவங்கோடு: குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஓண பண்டிகை வெற்றிகரமாக கொண்டாட்டம்!
குழித்துறை நகராட்சியில் அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கேரள பாரம்பரிய உடைகள் அணிந்து ஓண பண்டிகை கொண்டாடினர். வடம் இழுத்தல், ஊஞ்சல் ஆடல் மற்றும் அத்தபூ கோலம் என உற்சாகமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.