காளையார்கோவில்: ஆ .சிரமம் அருள்மிகு ஶ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷே விழா
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ள ஆ.சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் மூலவர் அய்யனார் சுவாமி ஏழுமுக காளியம்மன் மற்றும் கொங்கேஸ்வரர் சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.