கோவில்பட்டி: மந்தி தோப்பு சாலையில் சீரமைக்க வாழை நடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
கோவில்பட்டி மந்திதோப்பு சாலை வழியாக குருமலை கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகளும் அந்த வழியை பயன்படுத்தி வந்த நிலையில் மந்திதோப்பு சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது இந்த குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் வாழை நடும் போராட்டம் நடைபெற்றது.