விளவங்கோடு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெட் அலர்ட்: தாமிரபரணி ஆற்றில் அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரசாந்த் மு வடநரே மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.