வேலூர்: வேலூரில் வன உயிரின வார விழா: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டிகள்
வேலூர் டான் பாஸ்கோ பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் இதில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.