திருவட்டாறு: திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை: தொடரும் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிப் பகுதியில் உள்ள நீச்சல் குளம் மற்றும் கல் மண்டபம் நீரில் மூழ்கியுள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.