சாத்தான்குளம்: பேருந்து நிறுத்தம் முன்பு புதிய டவுன் பஸ் சேவையை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை செல்லும் டவுன் பஸ் ஆனது புதிய பேருந்தாக இன்று முதல் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்து சேவையை சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் ரஜினி ஸ்டெல்லாபாய் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் வர்த்தக சங்கத்தினர், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.