சாத்தான்குளம்: சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது அமைச்சர் பங்கேற்பு.
சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தில் இருந்து ரூ.1.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேரூராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.