வாணியம்பாடி அடுத்த நடுப்பட்டறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். அப்போது திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.