வேடசந்தூர்: வடமதுரை அருகே சட்டவிரோத எம்-சாண்ட் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொசவபட்டி சாலையில் ஆவணங்களின்றி எம்-சாண்ட் கடத்திய 3 டிப்பர் லாரிகளை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்தனர். டிரைவர்கள் தப்பியோடிய நிலையில், வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.