திருப்பூர் தெற்கு: திருப்பூர்: பூட்டிய வீட்டில் 45 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை
திருப்பூர் மாஸ்கோ நகரில் மளிகை கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.