தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது செட்டியார்பண்ணை. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதலே அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மதுபானக்கடை உடனடியாக மூடப்பட்டது.