கொல்லிமலை: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு இன்று ஒருநாள் தடை - வனத்துறை நடவடிக்கை!
நாமக்கல் கொல்லிமலையில் கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டு, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.