நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பை திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்
நாகூர் தர்காவின் கிழக்கு வாசல் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் திருடிச் சென்றார். இந்தத் திருட்டுச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.