அவிநாசி: திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டத்தில் பரபரப்பு: 6 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில், கொசு மருந்து மற்றும் குப்பை மேலாண்மை பணிகளில் முறைகேடு நடப்பதாகக் கூறி 6 கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் பணியாளர்களின் ஊதிய முறைகேடு குறித்தும் அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.