நாகப்பட்டினம்: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறையும்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும், அடுத்த 15 நாட்களில் பாதிப்புகள் மேலும் குறையும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் நாகப்பட்டினத்தில் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.