மானூர்: நெல்லை: தொழிற்சாலைக்கு எதிராக மனு அளிக்கச் சென்ற மக்கள் மீது போலீசார் தாக்குதல் - பரபரப்பு
நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்டித்து மனு அளிக்கச் சென்ற துறையூர் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுமக்களை தடுத்து நிறுத்தி வாகனச் சாவியை பறித்ததால் ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.