நாங்குநேரி: திருவரங்கனேரியில் முன்விரோதம்: மூவருக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது
திருவரங்கனேரியில் முன்விரோதம் காரணமாக மூவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் சுரேந்தர் என்பவரை ஏர்வாடி போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.