வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 57 ஊராட்சிகளுக்கு காசநோய் இல்லா விருது: ஆட்சியர் பாராட்டு!
வேலூர் மாவட்டத்தில் காசநோய் இல்லா ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட 57 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் சான்றுகளை வழங்கி பாராட்டினார். மேலும் மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.