காளையார்கோவில்: வாவரி மேல குடியிருப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி மாயம் என தாயார் காவல் நிலையத்தில் புகார்
காளையார் கோவில் அருகே வாவரி மேல குடியிருப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அவரது உறவினர் வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.சிறுமியின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தாயார் காளையார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.