தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட பூநாரைகள்!
தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் உணவு தேடி 100-க்கும் மேற்பட்ட பூநாரைகள் குவிந்துள்ளன. ஆழம் குறைவான நீர்ப்பகுதிகளில் காணப்படும் பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகளை உண்ண வரும் இந்தப் பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.