காளையார்கோவில்: முடிகரை கிராமத்தில் அதிமுக வேட்பாளரின் முகம் போன்ற மாஸ்க் அணிந்து நூதன முறையில் வாக்கு சேகரித்த அக்கட்சியினர்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், முடிகரை கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவருடன் வந்த கட்சி பிரமுகர்கள் அனைவரும் வேட்பாளர் சேவியர் தாஸின் முகம் போன்ற மாஸ்க் அணிந்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வின் போது அதிமுக மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் உடனிருந்தார்.