பரமக்குடி: பரமக்குடி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோகுல் என்பவரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.