பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் அதிதீவிர கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.