செங்கம்: பரமனந்தல் காமராஜர் நகர்: தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு காய்ச்சல் அச்சம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சி காமராஜர் நகரில் தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.