திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே தாழையூத்து சுப்ரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, சேலைகளுடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். முதன்மை நிர்வாக அலுவலர் ஸ்வேதா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கற்கள் கூட்டி கரும்பு வைத்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் இடப்பட்டது. பொங்கல் பொங்கி வரும் போது மாணவியல் குலவையிட்டு மகிழ்ந்தனர்.